உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். தற்போது அந்த பாதுகாப்பை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
இது குறித்து அகிலேஷ் யாதவ் கூறும்போது, “முன்னதாக அவர்கள் எனது வீட்டையும், வாகனத்தையும் பறித்துக் கொண்டனர். தற்போது எனது பாதுகாப்பையும் பறித்துக்கொண்டு அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். நான் தனியாக சைக்கிள் ஓட்ட விரும்புகிறேன். உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் (சமாஜ்வாதி கட்சி சின்னம்) வேகமாக இயங்கும் நேரம் வந்துள்ளது” என்றார்.
அகிலேஷின் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “நான் பாதுகாப்பை விரும்புவதில்லை. எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் தற்போது பாதுகாப்பு ஒரு விஷயமல்ல. சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் எனது அலுவலகத்துக்கு எவ்வாறு வருவார்கள்?
சமாஜ்வாதி கூட்டத்தில் இளைஞர் ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் மத முழக்கத்தை எழுப்புகிறார். பாஜக தலைவர் ஒருவரிடமிருந்து எனக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டலும் வருகிறது. அவர் குறித்த தகவல்களை சேகரித்துள்ளேன். இது பற்றிய விவரங்களை அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளியிடுவேன்” என்றார்.
இதையும் படிங்க : பாஜக பிரமுகரால் அகிலேஷ் உயிருக்கு ஆபத்தா?