புதுச்சேரியில் கரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தற்போது கரோனா மருத்துவமனை சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லை என்றும், ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஜூலை24) ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்த்தின் மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் தலைமையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு அந்த அமைப்பை சேர்ந்த பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.