ETV Bharat / bharat

கரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியர்களை மீட்க சீனா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்

author img

By

Published : Jan 31, 2020, 1:32 PM IST

Updated : Mar 17, 2020, 5:24 PM IST

டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவில் ’ஜம்போ பி 747’ இன்று புறப்பட்டது.

Air India
Air India

சீனாவில் 'கரோனா வைரஸ்' பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 'கரோனா வைரஸ்' பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 692ஆக அதிகரித்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் 'கரோனா வைரஸ்' பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக 423 இருக்கைகள் கொண்ட ’ஜம்போ பி 747’ ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டது.

சீனாவில் உள்ள சுமார் இந்தியர்களை இந்தியாவிற்கு அழைத்துவர இந்த விமானம் செல்கிறது. முதற்கட்டமாக 400 இந்தியர்களை விமானத்தில் அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது. இன்று புறப்பட்ட விமானம், நாளை அதிகாலை 2 மணி அளவில் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் இந்த விமானத்தில் அழைத்து வரப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸ்ஸிலிருந்து பாதுகாக்க - மதுரையிலிருந்து சீனா செல்லும் முகக் கவசம்!

Last Updated : Mar 17, 2020, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.