இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு நிலுவைத் தொகை வழங்குவது குறித்து கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், இம்மாதம் 18ஆம் தேதிக்குள் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைத்தொகை ஐந்தாயிரம் கோடி ரூபாயினை செலுத்தத் தவறினால், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய ஐந்து முக்கிய விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருட்கள் நிறுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்படாதவண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனானே குமார் கூறியுள்ளார்.
மேலும், எண்ணெய் நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் நிலுவைத் தொகை குறித்து தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படவில்லையெனில், பயணிகளின் பயணங்கள் பாதிக்கப்படாத வண்ணம் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதியளித்தார்.