ETV Bharat / bharat

புதிய வடிவில் கரோனா: புதிய கட்டுப்பாட்டுகள் விதித்த ஏர் இந்தியா! - latest update on international layovers

டெல்லி: உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலையங்களில் தங்கியுள்ள ஏர் இந்தியா குழுவினர் அனைவரும் புதிய கரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு ஏர் இந்தியா நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
author img

By

Published : Dec 22, 2020, 8:31 AM IST

புதிய வகையா கரோனா தொற்று இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது.

விமானங்கள் ரத்து

இங்கிலாந்தில் புதிய வகை கரோனா தொற்று பரவிவருவதால், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் வரும் 31ஆம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

கரோனா பரிசோதனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகையான கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதால், அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் வகையில் அந்நாட்டு அரசு கடுமையான பொது முடக்கத்தை டிசம்பர் 20 ஆம் தேதிமுதல் அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக அனைத்து விமானிகள் மற்றும் கேபின் குழுவினருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், புதிய வகை கரோனா வைரசை கருத்தில் கொண்டு, அனைத்து உள்நாட்டு / சர்வதேச நிலையங்களிலும் பணி அமர்த்தப்பட்ட குழுவினரும், தங்களை தனிமைப்படுத்திகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இங்கிலாந்தில் பரவும் புதிய வைரஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.