ETV Bharat / bharat

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு டிச. 1இல் வகுப்புகள் தொடக்கம்! - Engineering students

டெல்லி: முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என அகில இந்திய தொழிற்நுட்ப கல்விக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது.

aicte-academic-calendar-date-extended
aicte-academic-calendar-date-extended
author img

By

Published : Oct 19, 2020, 6:35 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைகள், ஐஐடி மற்றும் என்ஐடி ஆகியவற்றின் சேர்க்கை செயல்முறை காரணமாக முதலாம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தேதியினை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகளை டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க வேண்டும் எனவும் அகில இந்திய தொழிற்நுட்ப கல்விக்கான கவுன்சில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஏஐசிடிஈ (AICTE) சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ''கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தேசிய அளவிலான எமர்ஜென்சியை நாடு சந்தித்துள்ளது.

இதனால் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும். அதேபோல் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான கடைசி தேதி நவ.30 ஆக நீட்டிக்கப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசி நாளாக அக். 20ஆம் தேதி எனக் கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: மாணவர் ஜீவித் குமார் வீடியோவால் புதிய சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.