ETV Bharat / bharat

சச்சின் பைலட் விவகாரத்தைத் தீர்க்க 3 பேர் கொண்ட குழு - காங்கிரஸ் அறிவிப்பு - ராஜஸ்தான் காங்கிரஸ் 3 பேர் குழு

டெல்லி: ராஜஸ்தான் காங்கிரஸ் சச்சரவைத் தீர்க்கும் விதமாக மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் அமைத்துள்ளது.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
author img

By

Published : Aug 10, 2020, 9:24 PM IST

ராஜஸ்தான் அரசியல் குழப்பத்திற்கு தீர்வளிக்கும் விதமாக அதிருப்தி தலைவரான சச்சின் பைலட்டின் கோரிக்கைகளை பரிசீலிக்க மூன்று பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இது தொடர்பாக கூறுகையில், 'சச்சின் பைலட் மற்றும் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி எடுத்துள்ள நிலையில், விரைவில் இதற்குத் தீர்வு எட்டப்படும்' என்றார்.

கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவிவரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை சச்சின் பைலட் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி இல்லத்தில் சச்சின் பைலட்: சமாதான தூது வெற்றி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.