சுவாசக் கருவிகளின் அளவை அதிகரிக்க மல்டிபிளெக்சர் தொழில்நுட்பத்தை வடிவமைத்து அசத்தியிருக்கிறது அகமதாபாத் சிறுநீரக ஆராய்ச்சி மையம்.
கரோனா நோய்க் கிருமித் தொற்றினால் பாதிப்படைந்தோருக்கு அதிகளவில் செயற்கை சுவாசக் கருவிகளின் பயன்பாடு தேவைப்படும் வேளையில், அகமதாபாத் சிறுநீரக ஆராய்ச்சி மையம் இந்த மல்டிபிளெக்சர் கருவியை உருவாக்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் அதிகளவில் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் எத்தனை நோயாளிகள் வந்தாலும், சமாளித்து விட முடியும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.