பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் வைத்து நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லி வந்துள்ள காங்கிரஸ் கட்சி முதலமைச்சர்களுடன் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காங்கிரஸ் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.