உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் விகாஸ் துபே. இவரைக் கைதுசெய்ய காவலர்கள் கான்பூர் சென்றபோது, மறைந்திருந்த விகாஸ் துபே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காவல் துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ஒரு துணைக் கண்காணிப்பாளர், மூன்று உதவி காவல் ஆய்வாளர்கள், நான்கு காவலர்கள் என எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காவல் துறையினரின் உயிரிழப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களிலும் காவல் துறை உயர் அலுவலர்கள் சார்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார், ரெய்டுக்கு செல்வதற்கு முன்னால் குற்றவாளிகளைப் பற்றிய முழுமையான தகவல்களை உளவுத்துறை மூலமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் ஐஇடி ரக வெடிகுண்டு மீட்பு: பாதுகாப்புப் படையினர் விசாரணை!