ETV Bharat / bharat

கோவிட்-19 தடுப்பூசி சோதனையின் காலவரிசையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை - சுகாதார அமைச்சகம் - கோவிட்-19 தடுப்பூசி சோதனை

டெல்லி: கோவிட்-19 தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சோதனையின் காலவரிசையில் எந்தப் பாதகமான நிகழ்வும் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று (டிச. 01) தெரிவித்துள்ளார்.

vaccine
vaccine
author img

By

Published : Dec 2, 2020, 9:12 AM IST

இது குறித்து அவர் கூறுகையில், "கோவிஷீல்ட் தடுப்பூசி சோதனையில் அவ்வாறு பாதகமான நிகழ்வு எதுவும் ஏற்பட்டால், அதைப்பற்றி அறிக்கை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும்.

கோவிட்-19க்கு எதிரான கோவிஷீல்ட் தடுப்பூசி விசாரணையில் பங்கேற்ற சென்னை தன்னார்வலர் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ராஜேஷ் பூஷண், "பாதகமான நிகழ்வு எந்த வகையிலும் காலவரிசையைப் பாதிக்காது. இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது என்பதையும் நான் சுட்டுக்காட்ட விழைகிறேன். எனவே வழக்கின் குறிப்பிட்ட விஷயத்தில் நாங்கள் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என்று பதில் அளித்தார்.

மருத்துவச் சோதனை தொடங்கும் போதெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள், முன்பே அறிவிக்கப்பட்ட ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடுவார்கள் என்றும் பூஷண் குறிப்பிட்டார்.

மேலும், "இது ஒரு உலகளாவிய நடைமுறை. இது எல்லா நாடுகளிலும் நடக்கிறது. ஒருவர் சோதனையில் பங்கேற்க முடிவுசெய்தால் ஏற்படக்கூடிய பாதகம் பற்றி அந்தப் படிவம் விவரமாக விவரிக்கிறது.

மருத்துவப் பரிசோதனைகள் பல மையங்கள், பல தளங்களில் நடைபெறுகின்றன. தினமும் பரிசோதனைகள் கண்காணிக்கப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டுவருகிறது" என்றார் பூஷண்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “ஒவ்வொரு தளத்திலும் ஒரு நிறுவன நெறிமுறைகள் குழு உள்ளது. இது சுதந்திரமாகச் செயல்படுகிறது. ஏதேனும் பாதகமான நிகழ்வு ஏற்பட்டால், இந்தக் குழு அதைக் கவனித்து அதன் அறிக்கையை இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு அளிக்கிறது.

கோவிஷீல்ட் தடுப்பூசி 'பாதுகாப்பானது மற்றும் நோயெதிர்ப்புத் திறன்கொண்டது' என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (எஸ்ஐஐ) கூறியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் தடுப்பூசியால் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் தேவையான ஒழுங்குமுறை மற்றும் நெறிமுறை செயல்முறைகள், வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.