ETV Bharat / bharat

போலி மதுபான ஆலை வழக்கை சிபிஐக்கு மாற்ற அதிமுக எம்எல்ஏ அன்பழகன் மனு

author img

By

Published : Jun 21, 2020, 5:32 AM IST

புதுச்சேரி: போலி மதுபான ஆலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்.

admk mla anbazagan petition to kiren bedi

புதுச்சேரி அதிமுக எம்எல்ஏ அன்பழகன் நேற்று (ஜூன் 20) ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ”புதுச்சேரி மாநில வருவாயில் கலால் துறை முக்கியப் பங்கு வகித்துவருகிறது. இத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு மதுபானம் தயாரிக்கும் உரிமையாளர்கள் போலி ஹாலோகிராம் முத்திரை மூலம் அரசின் வருவாயைத் தாண்டி பொருளாதாரக் குற்றம் செய்துவருகிறார்கள்.

தரமாக உற்பத்தி செய்யப்படும் மதுபானத்திற்கு உரிய தொகையை அரசுக்கு முறையாகச் செலுத்தவும் 2006ஆம் ஆண்டில் மூடி மீது ஹாலோகிராம் முத்திரை ஓட்டும் வழக்கம் கொண்டுவரப்பட்டது. அந்த முத்திரையில் கலால் துறை துணை ஆணையர் கையொப்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் ரகசிய வார்த்தைகளும் இடம்பெற்றிருக்கும். ஹாலோகிராம் முறை நடைமுறைக்குப் பிறகு அரசுக்கு வருவாய் கூடுதலாக வந்ததை நான் சட்டபேரவையில் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறேன்.

அதிமுக எம்எல்ஏ அன்பழகன் மனு

புதுச்சேரியில் திமுக துணையோடு நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் தற்போது மதுபானம் தயாரிக்கும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆளும் காங்கிரஸ் அரசின் துணையோடு போலி ஹாலோகிராம் ஒட்டி மிகப்பெரிய அளவில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

இதற்கு ஒருசில அலுவலர்களின் துணையோடு தினந்தோறும் குற்றம் தங்குதடையின்றி நடைபெற்றுவருகிறது. தற்போது நடைபெறும் சிபிசிஐடி விசாரணைக்குப் பதிலாக சிபிஐ விசாரணைக்கு தாங்கள் உத்தரவிட்டு மாநிலத்தில் குற்றம் செய்பவர்கள் தப்பிக்கவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க... கடைகளை மூடும் நேரத்தை குறைக்க பரிசீலனை: நாராயணசாமி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.