கர்நாடக மாநிலத்தில் வனத்துறையின் கூடுதல் தலைமைக் காவலராக (ஏடிஜிபி) பணியாற்றும் ரவீந்திரந்த்துக்கு பதவி உயர்வு கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்திரந்தைவிட பணி அனுபவம் மற்றும் குறைந்த வயதுடைய ஊழியர்களுக்கு டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்துள்ள நிலையில், ரவீந்திரந்த் சில மாதங்களுக்கு முன்பு கடையில் இருந்த இளம்பெண் ஒருவரை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளதைக் குறிப்பிட்டு, இதன் காரணமாகவே அவரது பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ஏடிஜிபி ரவீந்திரந்த் தனது ராஜினாமா கடிதத்தை டிஜிபியிடம் நேற்று (அக்.28) வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு சீனியாரிட்டி இருந்தபோதிலும் பதவி உயர்வு கிடைக்கவில்லை. ஜூனியர் அலுவலர்கள்கூட பதவி உயர்வு பெற்றனர். தரவரிசைப்படி, எனது நிலை இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், ஐந்தாவது தரவரிசையில் உள்ள சுனில் குமாருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளனர்.
பதவி உயர்வு வழங்கப்படாத காரணத்தால் மட்டுமல்ல, பணியிடத்தில் துன்புறுத்தல் காரணமாகவும் தான் நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன். இதற்கு முன்னதாக, மூன்று முறை ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன். ஆனால், அவை நிராகரிப்பட்டன. இந்த விவகாரம் குறித்து விவாதிக்க டிஜிபி என்னை அழைத்துள்ளார்" என்றார்.