ETV Bharat / bharat

அபிநந்தன் படையினருக்கு விமானப்படை விருது அறிவிப்பு! - Abhinandan

டெல்லி: பாகிஸ்தான் விமானத்தை சூட்டு வீழ்த்தியதற்காக அபிநந்தன் இடம்பெற்ற 51 பேர் கொண்ட படையினருக்கு விமானப்படையின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அபிநந்தன்
author img

By

Published : Oct 6, 2019, 6:10 PM IST

இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் படையினர் அபிநந்தனை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடு இருந்ததையடுத்து அபிநந்தன் இந்தியா வந்தார். இந்நிலையில், விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது.

இதில் அபிநந்தன் இடம்பெற்றிருந்த 51 பேர் கொண்ட படையினருக்கு விமானப்படையின் யூனிட் சைடேசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பால்கோட்டில் தாக்குதல் நடத்திய 9ஆவது படைப்பிரிவு தலைவர் அகர்வாலுக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை விமானப்படையின் புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள மார்ஷல் பதோரியா வழங்கவுள்ளார்.

இதையும் படிக்கலாமே: பாக்., போர் விமானத்தை சுட்டுத் தள்ளிய அபிநந்தன்! நேரில் பார்த்த மிண்டி அகர்வால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.