மும்பையில் நடைபெற்ற ஐஐடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விமானப்படை தளபதி தனேவா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தனேவா, ‘அன்று பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற அபிநந்தன் மிக்-21 விமானத்திற்கு பதிலாக ரஃபேல் விமானத்தில் பறந்திருந்தால் போரின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும்.
ரஃபேல் விமானத்தில் பறக்கவேண்டிய அபிநந்தன், மிக்-21 சென்றதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கியதுதான். நமது அரசாங்கம் ஒரு ரஃபேல் விமானத்தை வாங்குவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொண்டது. இப்படியே சென்றால் இந்தியாவின் மொத்த அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.
மேலும், எஸ்-400 ஏவுகணை அமைப்பு கேம் சேஞ்சர் வாங்க முடிவு செய்துள்ளது. சிறந்த ஒப்பந்தம். பாதுகாப்பு கையகப்படுத்துதல் செயல்முறையை விரைவுப்படுத்த வேண்டும்’ என்றார்.
2019இல் அக். 5ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற 19ஆவது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சி மாநாட்டின் போது ஐந்து எஸ்-400 அமைப்புகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரானின் 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் - டிரம்ப் எச்சரிக்கை