பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது ஒரு சிறந்த சந்திப்பு. மோடிக்கு எதிராக நான் கருத்துகளைக் கூறியது போல என்னைச் சிக்கவைக்க ஊடகங்கள் முயலுகின்றன. இது குறித்து அவரே (மோடி) ஜோக் அடித்தார். மோடி உங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மனிதவளக் குறியீடு குறைந்துவருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க மறுத்த அவர், தான் மனிதவளம் குறித்துப் பங்காற்றவில்லை என்றும் அதனால் கருத்து கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.
மேலும், மோடி இந்தியா குறித்த தனக்கான பார்வையையும் பகிர்ந்துகொண்டதாகவும் இந்தச் சிறப்பான சந்திப்பிற்கு மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஜித் பானர்ஜி நெகிழ்வுடன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அபிஜித் பானர்ஜி தனது பூர்வீக மாநிலமான மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவுக்குச் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இந்தியாவில் வங்கிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி - அபிஜித் பானர்ஜி வேதனை