டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ள தேசிய தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் கடும் முனைப்பில் உள்ளன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஏற்கனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் கட்சியான ஆம் ஆத்மி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.
முன்னதாக, 'கெஜ்ரிவாலின் வாக்குறுதிகள்' (Kejriwal Ka Guarantee Card) என்று அறிக்கை ஒன்றை ஆம் ஆத்மி கட்சி ஜனவரி மாதம், வெளியிட்டிருந்தது. அதில் 200 யூனிட் மின்சாரத்தை தொடர்ந்து இலவசமாக வழங்குவோம், 24*7 குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் - மாநில பேரிடராக அறிவித்தது கேரளா!