பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிப்படைந்த ஒருவர் ரயிலின் மேல் ஏறி சென்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் அவரை கீழே வரக் கூறி எவ்வளவோ முயற்சித்தும், மின்சாரக் கம்பியைப் பிடித்த அவர், சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பற்றி எவ்வித தகவலும் தெரியாததால், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.