தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குல்சம்புராவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் ஒருவர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணமாக என அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்து காவலரின் சகோதரர் கூறுகையில், "எனது அண்ணன் இரண்டு வாரங்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டார்.
அதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் கரோனா பரிசோதனை செய்யாமல். காய்ச்சலுக்கு மருந்துகொடுத்து அனுப்பினர். அதன்பின் ஒரு வாரத்திற்கு பிறகு அவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்தது. அதையடுத்து அவர் இரண்டு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், வைரஸ் பாதித்திருந்தது தெரியவந்தது. ஆனால், அவர் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு நாள்களில் உயிரிழந்தார். எனவே, அவரின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமும், பரிசோதனையில் காலதாமதமும்தான் காரணம்" என்றார்.
இதனிடையே உயிரிழந்தவரின் உடல் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் கரோனா நோய் தொற்றுள்ள கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை