இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், இரு நாட்டின் உயர்மட்ட ராணுவ அலுவலர்கள் அவ்வப்போது சந்தித்து பதற்றத்தை குறைக்க பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் எல்லை நிர்வாக செயலாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தியா-சீனா எல்லையில் உள்ள அனைத்து திட்டங்களையும் விரைவுப்படுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக எல்லையில் பரவியுள்ள 32 சாலைகளின் பணிகளை விரைவுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எல்லை சாலை அமைப்பு (BRO), இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP), மத்திய பொதுப்பணித் துறை (CPWD) ஆகிய துறைகளை சேர்ந்த மூத்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.