ETV Bharat / bharat

ஆழ்துளைக் கிணறு விபத்துகள் என்று தணியுமோ! - ஹரியானாவில் சிறுமி மரணம் - latest borewell incidents

கர்னல்: ஹர்சிங்புரா கிராமத்தில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை 50 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

latest borewell incidents
author img

By

Published : Nov 4, 2019, 11:28 AM IST

ஹரியானா மாநிலம், காராவுண்டா ஹர்சிங்புரா கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியான சிவானி நேற்று (நவ. 3) பகல் 3 மணியளவில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். சற்றும் எதிர்பாராத விதமாக, அங்கு மூடப்படாமலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் சிறுமி தவறி விழுந்தார். சிவானி வீட்டிலிருந்து 20 அடி தொலைவில் உள்ளது இந்த ஆழ்துளைக் கிணறு.

குழந்தையைக் காணாமல் பெற்றோர் தேடி அலைந்துள்ளனர். ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகுதான் சிவானி 50 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்துள்ளதை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அருகிலிருந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் உடனுக்குடன்

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் தகவலளித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துவந்த மீட்புக் குழுவினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அருகில் குழி தோண்டத் தொடங்கினர். சிறுமி பயப்படாமல் இருக்க, அவரது தாயில் குரல் பதிவுசெய்யப்பட்ட கைப்பேசியை ஆழ்குழாய் கிணற்றுக்குள் மீட்புக் குழுவினர் இறக்கினர்.

பெண் குழந்தை 50 அடி ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து சிறுமி மரணம்

இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஹரியானாவில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது இது முதல் தடவை அல்ல என்றும் அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்தான் தமிழ்நாட்டில் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியது. இதனிடையே, ஹரியானாவில் சிறுமி உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Haryana: A 5-year-old girl fell into a 50-feet deep borewell, yesterday in Har Singh Pura village in Gharaunda of Karnal. Rescue operations underway.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.