தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள சிக்கத்பள்ளியைச் சேர்ந்த 94 வயாதன மூதாட்டி விஜயலஷ்மி. இவருக்குக் கடந்த 16 நாள்களுக்கு முன் கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்திலுள்ள காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்ட மூதாட்டி பெருந்தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். மருத்துவமனையில் வசதிகள் சிறப்பாக இருந்ததாகவும், மருத்துவர்கள், செவிலியர் தன்னிடம் நட்புடன் பழகியதாகவும் தெரிவித்த விஜயலஷ்மி, மருத்துவமனையின் சுகாதாரம், உணவு வசதிகள் தரமானதாக இருந்ததாகவும் கூறினார்.
தெலங்கானாவில் இதுவரை 25 ஆயிரத்து 733 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 306 பேர் நோய்த் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே கரோனா டெஸ்ட் பாசிட்டிவிட்டி விகிதம் எனப்படும் பரிசோதனை மூலம் பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்கள் அதிகமுள்ள மாநிலமாகத் தற்போது தெலங்கானா உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை மேற்கொள்ள வரிசையில் நின்ற பெண்ணுக்கு பிரசவம்!