ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் ஒன்பது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

terrorists killed  Jammu and Kashmir  soldiers martyred  Line of Control  ஜம்மு காஷ்மீரில் 24 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை  பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை  சுட்டுக் கொலை

author img

By

Published : Apr 5, 2020, 3:22 PM IST

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிசூட்டில் ஒன்பது பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, இந்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்தார்.

இது தொடர்பாக ராணுவ வட்டார தகவல்கள், “கடந்த 24 மணி நேரத்தில் இந்திய பாதுகாப்பு படைகள் ஒன்பது பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இந்த ஒன்பது பேரில், நான்கு பேர் தெற்கு காஷ்மீரின் பட்புரா பகுதியில் சனிக்கிழமை (ஏப்ரல்4) சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோல் வடக்கு காஷ்மீரில் நடக்கும் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையில் இதுவரை ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது பாதுகாப்புப்படை வீரர் ஒருவரும் மரணத்தை தழுவினார்.

இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். வடக்கு காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது” என்று கூறுகின்றன.

இதையும் படிங்க: கோவிட்-19 அறிகுறி: இந்தோனேசிய பெண் மதகுருமார்கள் தனிமைப்படுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.