மகாராஷ்டிரா மாநிலம் புனே - சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை காரும், லாரியும் மோதிக் கொண்டது. இதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சாலையின் தடுப்புச் சுவரை தாண்டிய கார், லாரி மீது மோதியதாகவும், கார் ஓட்டிநர் தொடர்ந்து இரண்டு நாட்களாக காரை இயக்கியதால் விபத்து நிகழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.