ETV Bharat / bharat

புதுச்சேரியில் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாள் அனுசரிப்பு - இந்திய விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம்

புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் "வெள்ளையனே வெளியேறு" இயக்க நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 9) அனுசரிக்கப்பட்டது.

Quit India Movement memorial day celebration in Puducherry congress party office

author img

By

Published : Aug 9, 2020, 5:22 PM IST

இந்திய விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி 78ஆவது ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினமான இன்று வைசியால் வீதியில் அமைந்துள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தும், அவர்களை கவுரவிக்கும் வகையில் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாநில அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.