ராஜஸ்தான் மாநிலம் சுருவில் உள்ள பிச்சராய் தால் கிராமத்தைச் சேர்ந்த 74 வயதான சிவபகவன் பகர் கடினமான யோகா செய்துவருவது பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.
இவர், 2001ஆம் ஆண்டில் பாபா ராம்தேவால் ஈர்க்கப்பட்டு மெதுவாகத் தனது வீட்டில் யோகா பயிற்சி செய்ய தொடங்கினார். 2007ஆம் ஆண்டில், அவர் பதஞ்சலி யோகா முகாமுக்குச் சென்றார். தற்போது அவர் இருக்கும் பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு யோகா கற்றுக்கொடுத்து வருகிறார்.
இதற்காக, இவருக்கு சர்வதேச யோகா தினத்தில் விருது வழங்கப்பட்டது. எல்லா வயதினரும் தினமும் ஒரு மணி நேரமாவது யோகா செய்தால், அவர்களுக்கு எந்த நோயும் ஏற்படாது என்று சிவபகவன் கூறுகிறார்.
இவர், தினமும் சுமார் 2 முதல் 3 லிட்டர் பால் குடிக்கிறார். கிராமத்தைச் சுற்றியுள்ள பல ஓட்டப்பந்தய போட்டிகளில் சிவபகவன் பங்கேற்று இளைஞர்களை எளிதில் தோற்கடிப்பார் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள்.
மேலும், சிவபகவன் இளைஞர்களுக்கு யோகாவின் முக்கியத்துவத்தை விளக்கி, மன அழுத்தத்தை எவ்வாறு குறைக்கிறது என்பதைப் பற்றி விளக்கியும்வருகிறார். தற்போது, இளைஞர்களும், பெண்களும் ஆர்வமுடன் யோகா பயிற்சி செய்கிறார்கள்.
அனைத்து வயதினர்களும் தினமும் ஒரு மணி நேரமாவது யோகா செய்தால், அவர்களுக்கு எந்த நோயும் ஏற்படாது என்று சிவபகவன் கூறுகிறார்.