உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் கரோனாவால் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவரது வீட்டிற்கு ஏப்ரல் 15ஆம் தேதி சென்ற மருத்துவக் குழுவினரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், தன்னலமற்று செயல்பட்டுவரும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இத்தாக்குதலில் ஈடுபட்ட 17 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 73 காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 73 காவலர்களின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் அமித் பதக் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க எங்களிடம் பொதிய காவலர்கள் இருப்பதாவும் அவர் கூறியுளளார்.
இதனிடையே, கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவப் பணியாளர்களைத் தாக்கும் நபர்களைத் தண்டிக்கும் வகையில் மத்திய அரசின் அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனத்துக்குரியது. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை 1,449 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் குணடமைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் வரை அபராதம்: மத்திய அரசின் அவசர சட்டம்!