ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜோரி மாவட்டத்தில் இன்று பஞ்சாயத்துக் கூட்டம் நடைபெற்றது. இந்த பஞ்சாயத்து ஆலோசனை கூட்ட முடிவில், அம்ஜீத் பர்வேஸ் என்பவரின் மூத்த சகோதரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உள்ளூர் கான்ட்ராக்டர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கான்ட்ராக்டர் அம்ஜீத்தின் சகோதரனை தகாத வார்த்தைகளில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் சந்தன் கோஹ்லி கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து அம்ஜீத் என்பவர் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரில் பஞ்சாயத்து கூட்டம் முடிந்த பின்னர் பர்வேஸையும், அவருடைய தந்தை முகமது பஷீரையும், அக்கூட்டத்திற்கு வந்த ஏழு பேர் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். பொது இடத்தில் இருவரையும் அவமதிக்கும்படியாக பேசியுள்ளனர். இந்த வழக்கு துறை ரீதியான முறையில் விசாரிக்கப்படும்” என்றார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உள்ளூர் கான்ட்ராக்டர் அஜய் சிங், பஞ்சாயத்து தலைவர் முகமது கான், கிராம நிர்வாகி அப்துல் ரசீத் மற்றும் மக்னா, ரஞ்சித் சிங், புஷ்பிந்தர் சிங், ஸ்வான் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: வன்கொடுமை: 'வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட வடமாநில பெண்'