குத்புல்லாபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலோபர் மருத்துவமனையில் 7 நாள்களுக்கு முன் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதன்பிறகு குழந்தையையும், தாயையும் கரோனா சோதனைக்கு உட்படுத்தியதில், இருவருக்கும் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த மருத்துவமனை நிர்வாகம், அவர்களை வீட்டுக்கு அனுப்பியது.
அவர்கள் வீட்டில் எவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பிறகே, இவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் குழந்தை கரோனா தொற்றால் ஏழு நாள்களிலேயே இறந்திருப்பது சுகாதாரத் துறையை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மருத்துவமனையிலிருந்து குழந்தைக்கு இத்தொற்று பரவியிருக்கலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.