நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, பிரமாண்டமான விநாயகர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடவுள் மீது பக்தி கொண்ட பக்தர்கள், விநாயகர் சதுர்த்தியை திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள். அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 61 அடி உயரமுள்ள மிக பிரமாண்டமான விநாயகர் சிலை உருவாகி வருகிறது.
இந்த பெரிய சிலை 12 முகம் கொண்ட விநாயகர் இருப்பது போன்று வடிவமைப்பவர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட இப்பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், தற்போது இந்த பிரம்மாண்ட சிலைக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் வைக்கப்படும் பிரமாண்ட சிலையை காண ஆறு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவார்கள் என, உத்ஸவம் சமிதி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சிலை வடிவமைப்பாளர்களில் ஒருவரான சின்னசாமி ராஜேந்திரந்திரன் கூறுகையில், இந்தப் பணியை 21 வருடமாக செய்து வருகிறோன். 16 அடி உயரம் கொண்ட சிலையாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணி மென்மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.
ஒரே மாதிரியான சிலைகளை வடிவமைப்பதில்லை. அதுதான் எங்கள் பணயின் சிறப்பாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.