ETV Bharat / bharat

பேருந்து மோதியதில் 6 குடிபெயர்ந்த தொழிலாளிகள் உயிரிழப்பு - வழக்குப்பதிவு, விசாரணை

Migrant workers  உத்தரப் பிரதேசத்தில் விபத்து  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு  வழக்குப்பதிவு, விசாரணை  6 migrant workers Killed
Migrant workers உத்தரப் பிரதேசத்தில் விபத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு வழக்குப்பதிவு, விசாரணை 6 migrant workers KilledMigrant workers உத்தரப் பிரதேசத்தில் விபத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு வழக்குப்பதிவு, விசாரணை 6 migrant workers Killed
author img

By

Published : May 14, 2020, 9:24 AM IST

Updated : May 14, 2020, 11:59 AM IST

09:10 May 14

உத்தரப் பிரதேசத்தில் நடந்துசென்ற குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது பேருந்து ஏறியதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காலுலி சோதனைச்சாவடி அருகே பேருந்து ஒன்று வந்த வேகத்தில் அவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்டு, ஆறு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

காவலர்களின் முதல்கட்ட விசாரணையில், பேருந்து மோதி மரணித்த தொழிலாளர்கள் பிகாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், “விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Last Updated : May 14, 2020, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.