ETV Bharat / bharat

பேருந்து விபத்தில் ஆறு பேர் பலி, 43 பேர் படுகாயம்!

ராஞ்சி: ஒடிசாவின் கார்வா மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இன்று காலை பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

garhwa
author img

By

Published : Jun 25, 2019, 1:09 PM IST

Updated : Jun 25, 2019, 1:16 PM IST

படுக்கை வசதிகொண்ட பேருந்து ஒன்று இன்று காலை சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னராஜ் பள்ளத்தாக்கின் அருகே செல்கையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து அங்குவந்த ஜார்கண்ட் காவல் துறையினர் அவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். பேருந்தின் உள்ளே பயணிகள் சிக்கிக் கொண்ட நிலையில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டு பயணிகள் மீட்கப்பட்டனர்.

இந்தக் கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் பள்ளத்தாக்கிலிருந்து மேலே கொண்டுவரப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 43 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சத்தீஸ்கரில் பேருந்து விபத்து

காயமடைந்தவர்களில் சிலர் அருகிலுள்ள சதார் மருத்துவமனைக்கும், படுகாயமடைந்தவர்கள் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் காவல் துறையினர் மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:

6 dead, 39 injured after bus fell into gorge in Jharkhand's Garhwa

Conclusion:
Last Updated : Jun 25, 2019, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.