ஹரியானா மாநிலம், குர்கான் அடுத்த கஜியபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஹிரலால். 101 வயதாகும் இந்த பெரியவர், தனது மகன் ஷர்மா, பேத்தி சிக்சா, பேரன்களான ஆஷிஸ், அக்சய், கொள்ளுப்பேரனான சிரேஷ்ட் ஆகியோருடன் தனது வாக்கினை இன்று பதிவு செய்துள்ளார்.
பிவானி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார். ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையும் ஒரே நேரத்தில் வாக்களித்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.