ETV Bharat / bharat

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாறும் இந்தியா!

author img

By

Published : Jun 15, 2020, 2:28 PM IST

டெல்லி : ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறி வருவதாக உரிமை மற்றும் இடர் பகுப்பாய்வு அமைப்பின் இயக்குநர் சுஹஸ் சக்மா விமர்சித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாறும் இந்தியா!
ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக மாறும் இந்தியா!

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி தொடங்கி அமலில் உள்ள ஊரடங்கு, வருகிற ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக குடிபெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிறு, குறு தொழிலாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் ஆகியோரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

இதில், ஊரடங்கின்போது பொது மக்கள், சிறு, குறு தொழிலாளர்கள், குடிபெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மீது, மத்திய, மாநில அரசுகள் வழக்குப் பதிவு, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் இது தொடர்பாக உரிமை மற்றும் இடர் பகுப்பாய்வு அமைப்பின் இயக்குநர் சுஹாஸ் சக்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின்போது சுமார் 55 ஊடகவியலாளர்கள் மீது வழக்குப் பதிவு, கைது, வன்முறை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

இதில் 22 ஊடகவியலாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், தொழில்நுட்பப் பிரிவின் கீழும், பட்டியலின வன்கொடுமை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழும் மத்திய அரசையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் விமர்சித்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது செய்யப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை மீட்டுள்ளது. கைது, வழக்குப் பதிவு நடவடிக்கைகளைத் தவிர்த்து ஊடகவியலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தும் மாநிலங்களில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மாநில அரசு குறித்து செய்தி வெளியிட்டதற்காக 11 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மாநிலங்களின் வரிசையில் ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.

பெருந்தொற்று அச்சுறுத்தல் காலத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை மத்திய அரசு முடக்க நினைக்கிறது. உலக அளவில் ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குடும்பத்தினருக்கு கரோனா: கண்ணீர்விட்ட ஊடகவியலாளருக்கு உதவிய ராகுல்காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.