டெல்லி: கரோனா ஊரடங்கின்போது, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீடு பெறுவோரின் எண்ணிக்கை 51 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாகத் தர மதிப்பீடு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஊரடங்கின்போது ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின்கீழ், காப்பீடு தொகை கோரும் பயனர்களின் எண்ணிக்கை 64% அளவுக்கு குறைந்துள்ளது என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
கரோனா நோய்க் கிருமித் தொற்றின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பொது ஊரடங்கின்போது, ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் காப்பீடு பெறுவோரின் எண்ணிக்கை 51 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாகத் தர மதிப்பீடு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதய நோயாளிகளின் பங்களிப்பும் மிகக் குறைவாக உள்ளது. மேலும், குழந்தை பிரசவம், புற்றுநோய் சம்பந்தப்பட்ட காப்பீட்டு கோரிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, ஊரடங்கின்போது வாரத்திற்குச் சராசரியாக காப்பீடு தொகை கோருவது 27,167 ஆகக் குறைந்துள்ளது. பொதுமுடக்கம் அறிவிப்பதற்கு முன் 62 ஆயிரத்து 630 புதிய பதிவுகள் இடம்பெற்றதாகவும், அதே வேளையில் பொதுமுடக்கத்தின்போது 57 விழுக்காடு சரிவைப் பதிவு செய்துள்ளது.