கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் மலப்புழா அணையில் அருகில் உள்ளது பூங்கா. இங்கு தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அணையின் அழகையும், பூங்காவில் உள்ள மலர்ச்செடிகள், மரங்களையும் பார்த்து ரசித்து செல்கின்றனர். இந்த பூங்காவில்தான் கவர்ச்சியான மலப்புழா யாக்ஷி சிலையும் அமைந்துள்ளது.
30 அடி உயரம் கொண்ட இந்த சிலையின் கலை நுட்பத்தைக் கண்டு, இளைஞர்கள் உள்பட்ட அனைத்து வயதினரும் பிரம்புக்குள்ளாகின்றனர்.
கேரளா மாநிலத்தில் அப்போது இருந்து நீர்ப்பாசனத் துறை தலைவர் கே.சி. பனிக்கரின் அழைப்பை ஏற்று, கேரளாவின் புகழ்பெற்ற சிற்பியான கனாயி குஞ்சி ராமனால் வடிவமைக்கப்பட்டு, 1969ஆம் ஆண்டு இந்த சிலை நிறுவப்பட்டது.
நிர்வாண தோற்றத்துடன் மதச்சார்பின்மையின் சின்னமாகத் திகழும் யாக்ஷி சிலை நிறுவப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.