ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஜீலுகுமில்லி கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கரிமுல்லா ஷெரீப், உதவி ஆய்வாளர் விஸ்வநாதம் மற்றும் அவரது குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு குறிப்பிட்ட வாகனத்தை சோதனை செய்தபோது, 4 ஆயிரத்து 275 மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. 4 ஆயிரத்து 16 குவாட்டர் பாட்டில்கள், 216 முக்கால் லிட்டர் பாட்டில்கள் மற்றும் 43 ஒரு லிட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மது பாட்டில்கள் அண்டை மாநிலமான தெலங்கானாவிலிருந்து ஆந்திராவிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மொத்தமாக கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆந்திராவில் சுமார் 20 லட்ச ரூபாயாகும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.