மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், தலைநகர் டெல்லியில் அதன் தாக்கம் தீவிரமாக உள்ளது.
டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் இரு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள போராட்டக்காரர்களை சமாதானம் செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் நேற்று டெல்லி ஜாப்ராபாத் பகுதியில் திரண்ட மக்கள் சிஏஏவுக்கு எதிராக திடீர் போராட்டம் நடத்தத் தொடங்கினர். இவர்கள் போராட்டம் நடத்தும் தகவல் பரவியதும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், சிஏஏ ஆதரவு போராட்டத்தை ஒரு குழு முன்னெடுக்கத் தொடங்கியது.
இந்த போராட்டம் திடீரென இரு குழுக்களின் மோதலாக மாற, அப்பகுதியில் காவல்துறை குவிக்கப்பட்டு கலகக்காரர்களை களைத்தது. இந்நிலையில் இந்தப் போராட்டத்தின்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் பைக்கில் வந்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வாரணாசியில் 4000 ஆண்டுகள் பழமையான கிராமம் கண்டெடுப்பு!