ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியிருந்த சட்டப்பிரிவு 370ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
அப்போது முதல் அங்கு அமைதி நிலவி வருவதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது. இந்நிலையில், காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து அமைதி திரும்பி வருவதாகவும், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளைக் கைவிட்டு வருவதாகவும் மத்திய அரசு சார்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 301 இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் தற்போது இணைந்துள்ளனர்.
காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் இணையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ்.ராஜு, தேசத்திற்காக சேவையாற்ற இருக்கும் இளைஞர்களை வாழ்த்திப் பேசினார்.