டெல்லி: மத்திய அரசின் ‘ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் ஒன்றிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர், மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து, உத்தரகாண்ட் ஆகியவை இணைந்துள்ளன.
இதன் மூலம் இத்திட்டத்தில் இணைந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை 24ஆக உயா்ந்துள்ளது என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளாா். இது குறித்த தகவலை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தத் தயார் : அமைச்சர் காமராஜ்
அதில், ‘ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் ஏற்கனவே 20 மாநிலங்கள் இணைந்திருந்த நிலையில், இப்போது ஒன்றிய பிரதேசமான ஜம்மு - காஷ்மீருடன் மூன்று மாநிலங்கள் இணைந்துள்ளன. அதன் மூலம் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஆந்திர பிரதேசம், பிகார், தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ, கோவா, குஜராத், ஹரியானா, இமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளன.
அதன் மூலம் மொத்த குடும்ப அட்டை பயனாளிகளில் 80 விழுக்காடு பேர், அதாவது 65 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்த 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பொது விநியோக திட்ட கடைகளில் மானிய விலையிலான உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளமுடியும்.
தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறதா 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்?
மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்தத் திட்டத்தில் 2021ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் இணைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.