கடந்த 6ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திலுள்ள பெய்க்போரா கிராமம் அவந்திபோராவில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் ரியால் நாய்கோ உள்பட நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ரியாஸ் சுட்டுகொல்லப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் நெட்வார்க் சேவைகளும், இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டிருந்தன.
அதன் பிறகு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று (மே 11) வெளியிடப்பட்டிருந்த அரசு அறிக்கையின் படி புல்வாமா, சோபியன் மாவட்டங்களைத் தவிர்த்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் துண்டிக்கப்பட்டிருந்த மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், இன்று முதல் 2G இணைய சேவை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு அங்கு அனைத்து விதமான இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டிருந்த போதிலும் 4G சேவைகள் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து, காஷ்மீர் முழுவதும் 4G சேவை தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் 4G சேவை தொடங்குவது குறித்து உயர்மட்ட குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்ததக்கது.
இதையும் படிங்க: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் அடுத்த தலைவர்?