நடப்பு மாதத்திலிருந்து அனைத்து ஊழியர்களுக்கும் 50 விழுக்காடு ஊதியத்தை வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 33 ஊழியர்களில் 29 பேருக்கு 50 விழுக்காடு ஊதியம் வழங்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய பணிகள், நான்கு ஊழியர்களுடன் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் தொலைபேசி வாயிலாக பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) டி.கே. மன்ரால், நிலைமை சரிசெய்யப்பட்டு மீண்டும் படகு சேவை தொடங்கும்போது பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைவரும் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
குஜராத் கடல் வாரியம் போதிய அகழாய்வுப்பணியை மேற்கொள்ளாத காரணத்தால், கடந்த மார்ச் 31 முதல் ரோ-ரோ ஃபெர்ரி சேவை முடக்கப்பட்டுள்ளது. இயங்குமளவிற்கு போதுமான ஆழம் இல்லாததால் கப்பல் கடலில் சீராக இயங்க முடியவில்லை.