ETV Bharat / bharat

கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் சேதமான 285 மரங்கள் மீட்டுருவாக்கம்!

கொல்கத்தா: ஆம்பன் புயலால் சேதமடைந்த மரங்களை மீட்டெடுக்கும் பயணத்தில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் துளிர்விட்டு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Banyan Tree
மீண்டும் துளிர்விட்ட மரம்
author img

By

Published : Oct 5, 2020, 1:11 PM IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்திருக்கும் பபானிபூர் வடக்கு பூங்காவில் (Northern Park) உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பலருக்கு தக்க சமயத்தில் ஆறுதலாகவும், பல நிகழ்வுகளின் சாட்சியாகவும் இருந்துவந்தது. மூன்று தலைமுறைகளின் இடைவெளிகளை நினைவுகளால் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தது.

குழந்தைகளுக்கு இதன் நிழல் விளையாட்டுத் திடலாகவும், முதியோருக்கு கதை கேட்க அமரும் திண்ணைபோலவும் இருந்தது இம்மரம். தூண்களைத் தரையில் ஊன்றி அதை வேர்களாக்கி கம்பீரமாக நின்ற இந்த ஆலமரத்தை ஆம்பன் புயல் நடத்திய கோரத் தாக்குதல் முற்றிலும் சாய்ந்துவிட்டது. ஆம், கடந்த மே மாதம் 20ஆம் தேதி கொல்கத்தாவில் ஆம்பன் புயல் ஒரு பேரழிவை ஏற்படுத்திச் சென்றது. அதில் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரமும் விதிவிலக்காக அல்ல.

ஆலமரத்தின் வீழ்ச்சி அப்பகுதியினருக்கு அதிர்ச்சி அளித்தபோதும்கூட அவர்கள் சோர்ந்து போகவில்லை. அதனை மீட்டெடுக்க முயன்றனர்.

பல முயற்சிகளுக்குப் பிறகு மரம் புத்துயிர் பெறத்தொடங்கியது. மெல்ல அதன் முறிந்த கிளைகள் மீது துளிர்விடத் தொடங்கியது. இப்போது 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் தனது அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

இது போலவே செம்மரக்கொன்றை, ஆலமரம், அரசமரம், மகிழம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் ஆம்பன் புயலால் சேதமடைந்தன. சுமார் ஆயிரத்து 600 மரங்கள் இதில் அடங்கும்.

கொல்கத்தாவில் நிலத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைகள், நீர் குழாய்கள், மின்னணு கம்பிகள் மரங்கள் ஆழமாக வளர்வதைத் தடுக்கின்றன. இதனால், மரத்தின் வேர்கள் தரையில் ஆழமாக செல்ல முடியாமல் பலவீனமடைந்து வருகின்றன.

தற்போது ஆம்பன் புயலால் சேதமடைந்த 25 ஆண்டுகள் பழமையான மரங்களை மீட்டெடுக்க கொல்கத்தா மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுவரை நகரத்தில் சேதமடைந்த மரங்களில் சுமாராக 300 மரங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவற்றில் 285 மரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் பபானிபூர் பகுதியில்தான் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வார்டின் (70) ஒருங்கிணைப்பாளர் அசிம் பாசு சுமார் இருபது மரங்களை மீட்டெடுத்துள்ளார்.

பபானிபூரில் வடக்கு பூங்கா, ராய் தெரு, நீதிபதி சந்திர மாதபூர் சாலை, சக்ரபேரியா சாலை, ரவீந்திர சரோபார், சுபாஷ் சரோபார் பகுதிகளில் புயலால் சேதமடைந்த மரங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுபாஷ் சரோவர் பகுதியில் 37 மரங்களில் 33 மரங்கள் மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன. ரவீந்திர சரோபரில் மீட்டெடுக்கப்பட்ட 144 மரங்களில் 111 மரங்கள் மீண்டும் வளரத் தொடங்கியுள்ளன. ஜாதவ்பூர் பல்கலைக்கழக அலுவலர்கள் 65 மரங்களை மீட்டெடுத்துள்ளனர். அவற்றில் 65 மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.