ETV Bharat / bharat

இந்தியாவில் கொரோனா: 6 பேருக்கு உறுதி! - 4 people infected by corona virus at India

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
author img

By

Published : Mar 4, 2020, 11:49 AM IST

கொரோனா என்ற வார்த்தை உலகளவில் மக்கள் மனிதில் மிகப்பெரிய பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெட் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது அடுத்த நிறுத்தமாக இந்தியாவில் கால் பதித்துள்ளது. சமீபத்தில் இத்தாலியிலிருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

நேற்று இத்தாலியிலிருந்து வந்த மூன்று இந்தியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களை டெல்லி சாவ்லாவில் உள்ள ஒரு ஐடிபிபி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி கொரோனாவின் தாக்கத்தால் உத்தரப் பிரதேசம் நொய்டாவில் இரண்டு பள்ளிகள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பிரதமர் மோடியும் ஆலோசனை நடத்திவருகிறார்.

வட இந்தியாவைப் போல் தென் மாநிலங்களான தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களும் கொரோனா பாதிப்பிலிருந்த தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் ஆறு பேரைத் தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட நுழைவு இசைவையும் (விசா) மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

இதையும் படிங்க: போப் ஆண்டவருக்கு கொரோனா இல்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.