2017ஆம் ஆண்டு, காஷ்மீர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப். துணை பாதுகாப்புப்படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஐந்து சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டனர், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ஃபர்தீன் அகமது காந்தே (Fardeen Ahmed Khandey), மன்சூர் பாபா (Manzoor Baba), அப்துல் ஷாகூர் (Abdul Shakoor) கொல்லப்பட்டனர்.
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்துவந்தநிலையில், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சையது ஹிலால் அன்தராபி (Sayed Hilal Andrabi) என்ற ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரரவாதியை கைது செய்துள்ளனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட சையதை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்துவருகின்றனர்.