தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் வான்போரா பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றிவளைத்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தச் துப்பாக்கிச் சண்டை சம்பவத்தில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம்!