உத்தரப் பிரதேசம் மாநிலம் மவு மாவட்டத்தில் உள்ள 9, 10 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்த இரண்டு சிறுமிகளும் சகோதரிகளாவர்.
இரண்டு இளைஞர்கள் சிறுமிகளைக் கட்டாயப்படுத்தி அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று, தொடர்ந்து பலமுறை அவர்களைப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். தங்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமையினை அச்சிறுமிகளின் மூத்த சகோதரியிடம் அவர்கள் கூறினர்.
இதனையடுத்து சிறுமிகளின் உறவினர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்துள்ளனர். மற்றொருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக தற்போது அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் முற்றுகை..!