உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் இரு வேறு சம்பவங்களில் உயிரிழந்தனர். பாலியா மாவட்டத்தில் பெய்த மழையின்போது மின்னல் தாக்கியதால் ஹரேந்திர யாதவ் (55), சாந்தி தேவ் (60) ஆகியோர் நேற்று இரவு உயிரிழந்தனர்.
பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள கிர்திர்பூர் கிராமத்தில் வசிக்கும் ஹரிநரைன் (58) என்பவர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
ஒரேநாளில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புனேவில் 25 மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா!