ETV Bharat / bharat

மகாராஷ்டிரா எஃகு ஆலையில் வெடிவிபத்து - இருவர் உயிரிழப்பு - மகாராஷ்டிரா தற்போதைய செய்தி

மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்திலுள்ள எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Maharashtra steel plant explosion
Maharashtra steel plant explosion
author img

By

Published : Jul 14, 2020, 11:20 AM IST

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கோபோலி பகுதியில் உள்ள எஃகு ஆலையில் நேற்று (ஜூலை 13) நள்ளிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். வெடிவிபத்தில் காயமடைந்த சுபாஷ் வஞ்சலே (55) உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், விபத்தில் இறந்தவர்கள் தினேஷ் சவான் (55), பிரமோத் சர்மா (30) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு தொழிற்சாலைகளும் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே வெடிவிபத்துகள் நடைபெறுவது தொடர் கதையாகியுள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதேபோல, கடந்த மாதம் தமிழ்நாட்டில் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.