ETV Bharat / bharat

'நேற்று மட்டும் 2.56 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்'

author img

By

Published : May 20, 2020, 4:52 PM IST

நேற்று ஒரேநாளில் 204 சிறப்பு ரயில்கள் மூலம் 2.56 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

2.56 lakh ferried in 204 Shramik trains on Tuesday

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக நேற்று 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதையும் மீறி நேற்று 204 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம், 2.56 லட்சம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

வெவ்வெறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் வகையில் மே 1 முதல் இதுவரை 1,773 சிறப்பு ரயில்களில் இயக்கபட்டுள்ளன" என்று கூறியிருந்தார்.

குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக மத்திய அரசு மே 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் சேவையைத் தொடங்கியது. இதுவரை மொத்தமாக 23 லட்சம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சாதரண பெட்டிகள் கொண்ட ரயில்கள், ஜூன் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரயில் சேவை தொடக்கம்: ஜூன் 1ஆம் தேதி முதல் நாள்தோறும் 200 ரயில்கள் இயங்கும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.